பூதப்பாண்டி அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
பூதப்பாண்டி அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி
அழகியபாண்டியபுரம்:
சுதந்திர தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து பூதப்பாண்டி அருகே மதுவை பதுக்கி விற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் திட்டுவிளை குருசடி பகுதிக்கு சென்றனர். அங்கு மது விற்றதாக செல்வசிங் (வயது 49), பூதப்பாண்டி புளியங்குளம் செல்வி (52) மற்றும் அரும நல்லூர் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஷோபனா தாஸ் (49) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 224 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story