சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
கீழ்வேளூர் போலீஸ் சரகம் ராதாமங்கலம் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்காலத்தூர் காலனி தெருவில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை பாப்பா கோவில் மதகடி தெருவை சேர்ந்த சாமித்துரை மனைவி அஞ்சம்மாள் (வயது 45) என்பது தெரிய வந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சம்மாளை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தெற்காலத்தூர் காலனி தெருவில் சாராயம் விற்ற தேவூர் பாரதி நகரை சேர்ந்த மோகன் (54), ராதாமங்கலம் எறும்புகன்னி மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகையன் (50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.