சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது


சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
x

சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உள்ள கண்காணிமுட்டம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காவிரிக்கரையோரம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி சுமத்திரா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, மயிலாடுதுறை ரயிலடி மாமரத்துமேடை அருகே சாராயம் விற்ற வெங்கடாசலம் மனைவி அஞ்சம்மாள் (77) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரகுமாரன்(29) என்பவரும் கைது செய்யப்பட்டார்.


Next Story