சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
மயிலாடுதுைற பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுைற பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
மயிலாடுதுறை அருகே நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் மயிலாடுதுறை அருகே மணக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் (வயது 45) என்பது தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல அதே பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நீடூர் கணபதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி மயிலம்மாள் (50), மொழையூர் மேலத்தெருவை சேர்ந்த ரவி மனைவி மலர்க்கொடி (60) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து இவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.