கார் கவிழ்ந்து 3 பேர் காயம்
கண்ணமங்கலம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் காயம் அடைந்தனர்.
கண்ணமங்கலம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தேகப்படாராணி பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர்ராஜ் (வயது 50). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48), மகன் தேகராம் (29), இவரது மனைவி மானஷா (24).
இவர்கள் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றனர். தனராம் (27) காரை ஒட்டினார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் தன்ராம் வலதுபுறமாக காரை திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் பழக்கடையின் அருகில் மோட்டார் சைக்கிளில் நின்று பேசிக் கொண்டிருந்த வாலிபர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கார் டிரைவர் தன்ராம், பழக்கடை வைத்துள்ள பாபு, மோட்டார் சைக்கிளில் நின்ற வாலிபர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.