வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செண்பக மூர்த்தி (வயது 39). சம்பவத்தன்று இவர், கருப்பாயூரணி பகுதியில் உள்ள ஓட்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜான்பிரிட்டோ, சதாம்உசேன் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி செண்பக மூர்த்தியிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாட்டுத்தாவணி போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இதுபோல், அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) என்பவர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்த பணத்தை சதீஷ்குமார் கத்தியை காட்டி மிரட்டி பறித்து விட்டார். இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story