தொழிலாளியை தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
தொழிலாளியை தாக்கிய 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மதி மகன் அருள்பாண்டியன்(31), கலியன் மகன் குட்டியான் என்கிற அழகேசன்(21), முருகன் மகன் அஜித்(24) ஆகிய 3 பேர் குடி போதையில் ஓரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தாக கூறப்படுகிறது. இதனை கண்ணதாசன் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருள்பாண்டியன், அழகேசன், அஜித் ஆகிய 3 பேரும் சேர்ந்து கண்ணதாசனை குச்சியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த கண்ணதாசன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன், அழகேசன், அஜித் 3 பேரையும் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.