நன்னடத்தை பிணையை மீறிய 3 பேருக்கு சிறை
நன்னடத்தை பிணையை மீறிய பத்தமடையை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 20), மணிகண்டன் (20), இசக்கிராஜ் (19) ஆகியோரிடம் இருந்து சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் மூலம் ஒரு ஆண்டுக்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டு இருந்தது. ஆனால் அதனை மீறி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர்களை பத்தமடை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய பின்னர், இசக்கிமுத்து மற்றும் இசக்கிராஜை 5 மாதங்களும், மணிகண்டனை ஒரு ஆண்டும் சிறையில் அடைக்க சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story