பணம் பறித்த 3 பேர் கைது
நெல்லை டவுனில் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 32). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள துக்க வீட்டுக்கு ஆறுதல் கூற சென்றார். அப்போது அவரிடம் இருந்து அதே தெருவை சேர்ந்த அருண்குமார் (26), சாலியர் தெருவை சேர்ந்த முருகராஜ் (24), மற்றும் கருவேலங்குன்று தெருவை சேர்ந்த சங்கர்ராஜ் என்ற கொம்பன் (23) ஆகியோர் சேர்ந்து மிரட்டி ரூ.500-ஐ பறித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமார், முருகராஜ், கொம்பன் ஆகிய 3 பேரை கைது செய்தார்.
Related Tags :
Next Story