புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
அம்பை:
கல்லிடைக்குறிச்சி பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஆணையப்பன் (வயது 47), இசக்கிமுத்து (42), ரவணசமுத்திரத்தை சேர்ந்த காஜா முகைதீன் ஆகியோரிடம் சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story