புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
x

அம்பையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்று கொண்டு இருந்த அம்பை முடப்பாலம் புதுக்காலனியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 45), ஆலங்குளம் கீழத்தெருவை சேர்ந்த பாஸ்கர் (45), மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (25) ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது, 3 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, ரூ.4½ லட்சம், 45 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story