மது விற்ற 3 பேர் கைது
கருப்பூர்:-
சேலம் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சேனைகவுண்டனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் ஓட்டம்பிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 42) என்பதும், அவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக சந்துக்கடை நடத்தி மதுவிற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் அனுமதியின்றி மது விற்றதாக தேக்கம்பட்டி செங்காட்டை சேர்ந்த முருகன்(44), தே.கொல்லப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன்(57) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் முருகனிடம் இருந்து 30 மதுபாட்டில்களும், முருகேசனிடம் இருந்து 50 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.