வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த போலீஸ்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தல்லாகுளம் போலீசார் புதுநத்தம் ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த விருமாண்டி (வயது 52), கணேசன் (52) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று மதிச்சியம் போலீசார் ஆழ்வார்புரம் ஓபுளாபடித்துறையில் கஞ்சா விற்ற அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியை சேர்ந்த அர்ஜூன் (19) என்பவரை கைது செய்தனர்.