சாராயம் விற்ற 3 பேர் கைது


சாராயம் விற்ற 3 பேர்  கைது
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T16:37:27+05:30)

மயிலாடுதுறை பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ெரயில்வே கேட் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாந்துக்காப்புத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 40) என்பது தெரியவந்தது.

330 லிட்டர் சாராயம்

இதேபோல திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் காவிரி கரையோரம் சாராய விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விமல்ராஜ் (20), பல்லவராயன்பேட்டை பகுதியில் சாராய விற்ற மயிலாடுதுறை திருவாரூர் சாலை கண்ணாரத் தெருவை சேர்ந்த சேட்டு மகன் பாலாஜி (26) ஆகிய 2 பேரையும் ைகது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து தலா 110 லிட்டர் வீதம் 330லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story