மதுபானம் விற்ற 3 பேர் கைது


மதுபானம் விற்ற 3 பேர் கைது
x

வடமதுரை பகுதியில் மதுபானம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, அங்கமுத்து, கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊராளிபட்டி மற்றும் எட்டிக்குளத்துப்பட்டி பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்த ஊராளிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (வயது 30), கந்தசாமி (50), நிலக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜா (52) ஆகியோைர கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story