கிளிகளை விற்பனை செய்த 3 பேர் கைது


கிளிகளை விற்பனை செய்த 3 பேர் கைது
x

திருச்சியில் கிளிகளை விற்பனை செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் கிளிகளை விற்பனை செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கிளிகள்

திருச்சி கீழப்புதூர் குருவிக்காரன் தெருவில் பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் குருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் நாகையா தலைமையில் தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் 408 பச்சைக்கிளிகள் மற்றும் 347 முனியாஸ் குருவிகள் இருந்தன. இவைகள் கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்ல இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று திருச்சி தெப்பக்குளம் பெரிய கடை வீதியில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்ய முயன்ற திருச்சி கீழப்புதூர் குருவிக்காரன் தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 33), சிவா (30), முருகேசன் (45), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பச்சைக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கிளிகளை உள்ளூர் சந்தையிலும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கிளி கூண்டுகள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story