புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2022 6:45 PM GMT (Updated: 19 Oct 2022 6:45 PM GMT)

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று அண்ணா பஸ்நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள 3 பெட்டிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். சோதனையில் பெட்டிக்கடைகளில் விற்பனைக்காக மொத்தம் 60 பாக்கெட் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா போன்றவை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கடை உரிமையாளர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த புததீப் (வயது 34), அலி உசேன் (20), சுபாஷ் கொசாயி (22) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story