தி.மு.க. கவுன்சிலரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது


தி.மு.க. கவுன்சிலரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
x

தி.மு.க. கவுன்சிலரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர் குமாரசாமிப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளராகவும், 14-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். கடந்த 11-ந் தேதி இரவு சாந்தமூர்த்தி வீட்டுக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்து கதவை தட்டினர். அப்போது வெளியே வந்த கவுன்சிலரை அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதுடன் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். இதுதொடர்பாக சாந்தமூர்த்தி அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கவுன்சிலரிடம் பணம் கேட்டு மிரட்டியது குமாரசாமிப்பட்டி ராம் நகர் ஓடை பகுதியை சேர்ந்த மணி (வயது 33), வினோத்குமார் (28), சூர்யா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story