சேலத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் உத்தரவு


சேலத்தில்  3 பேர் குண்டர் சட்டத்தில் கைது  போலீஸ் கமிஷனர் உத்தரவு
x

சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

சேலம்

சேலம்,

லாட்டரி சீட்டு

கருப்பூர் அருகே உள்ள கொல்லப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்லதுரை (42), மாரியப்பன் (55). பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (48). இவர்கள் கடந்த மாதம் காமேஷ் என்பவரிடம் கண்டிப்பாக பரிசு விழும் என கூறி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். பரிசு விழாத காரணத்தால். அவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.

அப்போது செல்லதுரை உள்பட 3 பேரும் சேர்ந்து காமேசை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரை, மாரியப்பன், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 840 மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மாரியப்பன், ஏழுமலை ஆகியோர் மீது ஏற்கனவே கருப்பூர் போலீஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற வழக்கு பதிவாகி இருந்து தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் கைது

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் செல்லத்துரை, ஏழுமலை, மாரியப்பன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து செல்லத்துரை, ஏழுமலை, மாரியப்பன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.


Next Story