வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம்


வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம்
x

சிவகாசி அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

துப்புரவு பணியாளர்

சிவகாசி அருகே உள்ள குமிழங்குளத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் மாரியப்பன் (வயது 54). இவர் தனது மோட்டார் சைக்கிளில் விருதுநகர்-அழகாபுரி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மாரியப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்துஎம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல சிவகாசி எம்.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி (25) என்பவர் தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் மங்களம்-எம்.புதுப்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று செந்தூர்பாண்டி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் வெள்ளங்கனியப்பன் (65). இவர் சிவகாசியில் உள்ள ஒரு மெட்டல் பவுடர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் வெள்ளங்கனியப்பன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story