சூதாடிய 3 பேர் சிக்கினர்
திசையன்விளையில் சூதாடிய 3 பேர் சிக்கினர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று சீலாத்திகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள குளக்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட முடவன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 35), கஸ்தூரிரெங்கபுரம் அய்யப்பன் (37), சமூகரெங்கபுரம் மனுவேல் (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கீழ பார்க்கநேரியை சேர்ந்த ரமேஷ் (35), ராதாபுரம் உச்சிமாகாளி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். சூதாட்டம் நடத்தியவர்களிடம் இருந்து ரூ.650 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story