லாரியை கடத்திய 3 பேர் கைது


லாரியை கடத்திய 3 பேர் கைது
x

ஆலங்குளம் அருகே லாரியை கடத்திய 3 பேர் கைது

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரியில் புதுப்பட்டியை சேர்ந்த மாலதி (வயது 32) என்பவருக்கு சொந்தமான லாரி வேலைக்காக இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு கல்குவாரிக்கு விடுமுறை அளித்ததால் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டுள்ளனர்.

இந்தநிலையில் லாரியின் உரிமையாளர் நேற்று காலை வழக்கம்போல் குவாரிக்கு வந்தபோது லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தபட்டிருப்பதாக லாரி உரிமையாளர் போலீசாரிடம் கூறினார். அதன்பேரில் சோதனை செய்ததில் லாரி முக்கூடல் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் லாரியை பறிமுதல் செய்து லாரியை திருடிய புதுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38), மதன் (30) மற்றும் கீழசெவலை சேர்ந்த பாலமுகேஷ் (34) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story