துப்பாக்கியால் சுட்டு மீன்பிடித்த 3 பேர் சிக்கினர்
சாயல்குடி அருகே துப்பாக்கியால் சுட்டு மீன்பிடித்த 3 பேர் சிக்கினர்.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது கடலில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியால் சுட்டு 3 பேர் கொண்ட ஒரு கும்பல் மீன்களை பிடித்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். வனத்துறை அதிகாரி கனகராஜ், துப்பாக்கியால் சுட்டு மீன்பிடித்ததாக கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பைசல் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கி, சொகுசு காரை பறிமுதல் செய்தனர். அவர்களை கீழக்கரை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story