உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3 பேர் கைது


உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கருங்குளத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பாலக்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி கருங்குளம் கிராம மக்கள் நலக்குழுவின் தலைவர் உடையார் தலைமையில் கருங்குளத்தில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் கருங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத பந்தலில் உண்ணாவிரதம் இருப்பதற்காக உடையார் மற்றும் அவரது மகன் கருணாநிதி உள்ளிட்ட ஆதரவாளர்கள் வந்தனர். அவர்களை செய்துங்கநல்லூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உடையார் மற்றும் அவரது மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் கருங்குளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story