தூத்துக்குடியில் முன்விரோதத்தில்தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது


தூத்துக்குடியில் முன்விரோதத்தில்தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி லயன்ஸ்டவுனை சேர்ந்தவர் ரவி சாம்ராஜ். இவருடைய மகன் ராஜன் (வயது 38). தொழிலாளி. இவருக்கும், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த விஜயன் மகன் லசிங்டன் அண்டோ (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று ராஜன், தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் நின்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த லசிங்டன் அண்டோ மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த பிரவீன் மகன் பிரான்சிஸ் புருனோ (23), தூத்துக்குடி கிரகோப் தெருவை சேர்ந்த வெனிஸ்டன் மகன் விஷால் (23) ஆகிய 3 பேரும் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து, பிரான்சிஸ் ப்ரூனோ, லசிங்டன் அண்டோ, விஷால் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.


Next Story