லாரி டிரைவர்களை தாக்கி ரூ.3 ஆயிரம்- செல்போன் பறித்த 3 பேர் கைது


லாரி டிரைவர்களை தாக்கி ரூ.3 ஆயிரம்- செல்போன் பறித்த 3 பேர் கைது
x

லாரி டிரைவர்களை தாக்கி ரூ.3 ஆயிரம் செல்போனை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

மலைக்கோட்டை, ஆக.15-

லாரி டிரைவர்களை தாக்கி ரூ.3 ஆயிரம் செல்போனை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாரி டிரைவர்கள்

துறையூரை அடுத்த பழைய மங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலையன். இவரது மகன் சந்திரன் (வயது 32). லாரி டிரைவரான இவரும், மற்றொரு லாரி டிரைவரான விக்னேஷ் என்பவரும் நேற்று முன்தினம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் லாரியில் உருளைக்கிழங்கு லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே வந்தனர்.

அப்போது, முடுக்குப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (20), மணிகண்டம் அருகே உள்ள தீரன் மாநகரை சேர்ந்த பிளிக்கான் (24), சுப்பிரமணியபுரம் அஜய் என்ற அருண் (20) ஆகியோர் லாரியை நிறுத்த சொல்லி சந்திரன், விக்னேஷ் ஆகியோரிடம் இருந்த ரூ.3 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும் லாரியின் கண்ணாடியை உடைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story