சிதம்பரத்தில்அரசு ஊழியர் தம்பதி வீட்டில் 42 பவுன் நகைகள் கொள்ளையடித்த 3 பேர் கைது


சிதம்பரத்தில்அரசு ஊழியர் தம்பதி வீட்டில் 42 பவுன் நகைகள் கொள்ளையடித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் அரசு ஊழியர் தம்பதி வீட்டில் 42 பவுன் நகைகள் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் பள்ளிப்படை வின்நகரை சேர்ந்தவர் அகஸ்டின்ராஜ்(வயது 44). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணிபுரிந்த இவர், பெருந்துறை பாலிடெக்னிக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது மனைவி டெஸ்சி செல்வராணி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பார்மசியில் வேலை செய்து வருகிறார்.

வழக்கம்போல் கடந்த மாதம் 26-ந் தேதி டெய்சி செல்வராணி, வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறக்கவு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 42 பவுன் நகைகளை காணவில்லை. இதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், பாபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் நடத்திய விசாரணையில் சென்னை பொத்தேரி மேல்பாக்கம் சிறுவஞ்சூர் குப்பகாளிமேட்டை சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி (26), ராஜ் மகன் சக்திவேல் (27), மணி மனைவி நதியா (25) ஆகியோர் நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.


Next Story