மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேர் தப்பி ஓட்டம்


மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேர் தப்பி ஓட்டம்
x

மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

வேலூர்

காட்பாடி

மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காங்கேயநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடியவர்கள் காங்கேயநல்லூரை சேர்ந்த விக்னேஷ், சந்தோஷ்குமார், சுந்தரேசன் ஆகியோர் என தெரியவந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகளை மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story