கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்த 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்


கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்த 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த 3 போலீஸ்காரர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த 3 போலீஸ்காரர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தநிலையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர்களுடன் சில போலீஸ்காரர்களுக்கு தொடர்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் கண்ணன், அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்க்கும் ரமேஷ், சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் வேணுகோபால் ஆகிய 3 பேருக்கும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பணியிடை நீக்கம்

இதனையடுத்து கண்ணன், ரமேஷ், வேணுகோபால் ஆகிய 3 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய போலீஸ்காரர்களே, கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story