குமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன


குமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன
x

கனமழை எதிரொலியாக குமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

கனமழை எதிரொலியாக குமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன.

902 குளங்கள் நிரம்பின

குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதே சமயம் குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் 2,040 குளங்கள் உள்ளன. அதில் இதுவரை 902 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 1,102 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. மற்ற குளங்களும் நிரம்பி வருகின்றன.

3 குளங்கள் உடைந்தன

இதில் தண்ணீர் வரத்து அதிகமானதால் பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு பகுதியில் உள்ள நாடான்குளத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

அதாவது மறுகால் பாயும் பகுதியில் உள்ள இடத்தில் கரை உடைந்ததால் தண்ணீர் அதிகளவு வெளியேறியது. இந்த தண்ணீர் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இருந்த பயிர்களை சுற்றிலும் தேங்கியது.

ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக நாடான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது. இதனால் தான் தற்போது மீண்டும் நாடான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். எனவே குளத்தை நிரந்தரமாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர கல்படி குளம் உள்பட மொத்தம் 3 குளங்கள் உடைந்துள்ளன.


Next Story