வீடு புகுந்து மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு


வீடு புகுந்து மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு
x

குலசேகரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர்கோணம் அஞ்சுகண்டரை சாலை பகுதியை சேர்ந்தவர் ஜானகியம்மாள் (வயது 74). இவருடைய மகள் ஸ்ரீகலா. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். ஸ்ரீகலா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீகலா மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால், வீட்டில் ஜானகியம்மாள் மட்டும் தனியாக இருந்தார்.

3½ பவுன் சங்கிலி பறிப்பு

மதிய வேளையில் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக திடீரென உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, ஜானகியம்மாளின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே ஜானகியம்மாள் திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், மர்ம நபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து ஜானகியம்மாள் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச் சென்ற சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story