பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
ஆரணி அருகே பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
ஆரணி
ஆரணியை அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி மாயா (வயது 68). இவர் இரும்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பெண் சித்தாளாக வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு மாலையில் மெய்யூரில் இருந்து ஆரணிக்கு பஸ்சில் வந்தார். ஆரணியில் இருந்து சேவூரில் உள்ள தனது பேத்தி சினேகாவை பார்ப்பதற்காக பஸ்சில் ஏறினார்.
சேவூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று இறங்கும்போது பார்த்ததில் மாயா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். சேவூரில் இறங்கும் போது பார்த்ததால் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் அளியுங்கள் என கூறினர்.
இதையடுத்து அவர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.