நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x

ஜோலார்பேட்டை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையன் 3 பவுன் நகையை பறித்து சென்றது அதிர்ச்சியை ஏறணு்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையன் 3 பவுன் நகையை பறித்து சென்றது அதிர்ச்சியை ஏறணு்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த சாலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 45). இவரது கணவர் பரந்தாமன் இறந்துவிட்டார். இதனால் சகோதரர் வீட்டில் பரமேசுவரி வசித்து வருகிறார் இந்நிலையில் அவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்ற பேரன்களை அழைத்து வர சாலை நகர் பகுதி வழியாக நடந்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள தனியார் கலைக் கல்லூரி பின்புறம் நடந்து சென்று கொண்டு இருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மர்மநபர் திடீரென பரமேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு தப்பினான். பரமேசுவரி கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அதற்குள் கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி விட்டான். இது குறித்து புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தப்பிய கொள்ளையனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் நகையை பறித்து ெசன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story