மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்


மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 28 July 2023 1:30 AM IST (Updated: 28 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாட்டத்தில் மதிப்பெண் பட்டியலை திருத்தி பணியில் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்து இருப்பதாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் பணியாற்றி வருவதாகவும் மின்வாரியத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புகார்களில் குறிப்பிடப்பட்டு இருந்த ஊழியர்கள் பணியில் சேரும் போது சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், அவர்கள் பணியின் போது சமர்ப்பித்த 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் பல கட்டங்களாக நடந்தன. அப்போது முறைகேடு செய்து சிலர் பணியில் சேர்ந்து இருப்பதாக தெரியவந்தது. அதன்படி, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மின்வாரிய பண்டகசாலையில் உதவியாளராக பணியாற்றிய பாண்டியராஜன், சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சுந்தரி, கூடலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டு பணியாளராக பணியாற்றிய கண்ணன் ஆகிய 3 பேரின் மதிப்பெண் சான்றிதழ்களிலும் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story