திருச்சி மத்திய சிறையில் இருந்து 3 கைதிகள் விடுதலை


திருச்சி மத்திய சிறையில் இருந்து 3 கைதிகள் விடுதலை
x

திருச்சி மத்திய சிறையில் இருந்து 3 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருச்சி

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை 75-வது சுதந்திர தினத்தையொட்டி விடுதலை செய்ய அறிவுறுத்தி இருந்தது. அதன்படி திருச்சி மத்திய சிறையில் இருந்து தண்டனை கைதிகளான தஞ்சையை சேர்ந்த முருகன்(வயது 44), சசிகுமார்(37), கரூரை சேர்ந்த மகாராஜா(51) ஆகிய 3 கைதிகள் அவர்களுடைய தண்டனை காலம் குறைக்கப்பட்டு, நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் புதுக்கோட்டை சிறையில் இருந்து சக்திவேல் என்ற கைதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Next Story