3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு


3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு
x

வேலூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளாக மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றியம் நாவிதம்பட்டி தொடக்க பள்ளி, வேலூர் மாநகராட்சி டாக்டர் அம்பேத்கர் நகர் நடுநிலைப்பள்ளி, சின்ன அல்லாபுரம் தொடக்கப் பள்ளி ஆகியன சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாவிதம்பட்டு தொடக்கப் பள்ளி கடந்த 1955-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, 2 பள்ளி கட்டிடங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 கழிவறைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாவிதம்பட்டி, சின்ன குளிதிகை ஆகிய கிராமங்களிலிருந்து மொத்தம் 70 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் சந்திரன் உள்பட 3 பேர் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் பாடங்கள் கற்பிப்பதோடு, மாணவர்களுக்கு யோகா, தியான பயிற்சி, மடிக்கணினி பயிற்சி, அன்றாடம் செய்தி தாள் வாசிக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.


Next Story