வனப்பகுதியில் பக்தர்கள் வீசிச்சென்ற 3 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள்


வனப்பகுதியில் பக்தர்கள் வீசிச்சென்ற 3 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள்
x

வனப்பகுதியில் பக்தர்கள் வீசிச்சென்ற 3 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள்

திருப்பூர்

உடுமலை

உடுமலை வனச்சரகத்திற்குட் பட்ட பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்துசென்றபக்தர்கள் போட்டுச்சென்ற 3ஆயிரம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தன்னார்வலர்கள் சேகரித்து அப்புறப்படுத்தினர்.

ஏழுமலையான் கோவில்

உடுமலையில் இருந்து மூணார் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து 5கி.மீ.தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். பிரசித்தி பெற்றஇந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்த கோவிலுக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வார்கள்.

இந்த கோவிலுக்குஉடுமலை மூணார் சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடுமுரடான பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும்.ஒவ்வொரு வாரமும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சனிக்கிழமை நாட்களில் அந்தபகுதிக்கு வந்திருந்து, பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்லவேண்டாம் என்று பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் தண்ணீர் தேவைக்காக கொண்டு வருகின்ற, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்திவிட்டு காலி தண்ணீர் பாட்டில்கள், கவர்கள் ஆகியவற்றைவனப்பகுதிகளிலே வீசி செல்கின்றனர். இந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உள்ள உணவுப் பொருட்களை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் என்னவென்று தெரியாமலேயே அவற்றை

உணவு என்று நினைத்து சாப்பிடுவதால் பல்வேறு வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

சேகரிப்பு

இதைத் தொடர்ந்து பல்வேறுதன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்த பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி 3-வது வாரமாக நேற்று முன்தினம் அங்கு வனப்பகுதியில், பக்தர்கள் நடந்து சென்ற பாதை பகுதிகள் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கு கிடந்த 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டன.இவை30 சாக்குகளில் சேகரிக்கப்பட்டன.அவை அங்கிருந்துஎடுத்து வரப்பட்டு, செக் போஸ்ட்

பகுதியில் வனத்துறையினரின் குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Next Story