3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

விருதுநகர் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணற்றை சேர்ந்த சீனி என்பவரது கிட்டங்கி நந்திக்குண்டு கிராமத்தில் உள்ளது. அதை மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 50) என்பவர் வாடகைக்கு எடுத்து அங்கு மதுரையை சேர்ந்த கணேஷ் பாண்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் மல்லாங்கிணறு அருகே உள்ள சூரம்பட்டியை சேர்ந்த பூமி ராஜ் ஆகிய 3 பேரையும் வேலையாட்களாக நியமித்து இருந்தார்.

அந்த பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து அரைத்து 50 கிலோமாவு மூடைகளாக பேக்கிங் செய்து நாமக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மல்லாங்கிணறு போலீசார் அந்த கிட்டங்கியில் சோதனை செய்த போது அங்கு தலா 50 கிலோ கொண்ட 64 மூடைகளில் 3.2 டன் ரேஷன் அரிசி இருந்தது.

அதேபோன்று தலா 50 கிலோ கொண்ட 44 மூடைகளில் 2.2 டன்அரிசிமாவு இருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கு பணியில் இருந்த கணேஷ் பாண்டி முத்துகிருஷ்ணன், பூமிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Next Story