அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல்
சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றி செல்வதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கனிமவளத்துறை அதிகாரிகள் சபியா மற்றும் சேகர், தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்டோர் திருமுல்லைவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சவுடு மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை மடக்கி பிடித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது லாரி ஓட்டுனர்கள் இறங்கி தப்பி ஓடியுள்ளனர். ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மண் ஏற்றி வந்த்து தெரியவந்தது. இதையடுத்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுனர்களை சீர்காழி போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story