அட்டகாசம் செய்த 3 காட்டு யானைகள் மேலுமலைக்கு விரட்டப்பட்டன
தென்பெண்ணை ஆற்றை கடந்து மேலுமலை வனப்பகுதிக்கு 3 யானைகளை வனத்துறையினர் போராடி விரட்டினார்கள்.
குருபரப்பள்ளி:-
தென்பெண்ணை ஆற்றை கடந்து மேலுமலை வனப்பகுதிக்கு 3 யானைகளை வனத்துறையினர் போராடி விரட்டினார்கள்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சோக்காடி, பனகமுட்லு, பிக்கனப்பள்ளி, மேலுமலை உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு முன்பு 3 காட்டுயானைகள் முகாமிட்டு.அட்டகாசம் செய்து வந்தன இந்த யானைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் நுழைந்தன.
வனத்துறையினர் அங்கிருந்து விரட்டிய போது யானைகள், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டன. இதனால் அங்கு குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர்.
விரட்டப்பட்டன
தொடர்ந்து யானைகள், கிருஷ்ணகிரி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக வனத்துறையினர் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி, அதனை பாதுகாப்பாக மீண்டும் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்கு நேற்று முன்தினம் விரட்டினார்கள். நேற்று காலை யானைகளை, மேலுமலை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர். யானைகள் எண்ணேகோல்புதூர் கிராமத்தின் வழியாக தென்பெண்ணைஆற்றினை கடந்து மேலுமலைக்கு வனத்துறையினர் விரட்டினார்கள். யானைகள் இடம் பெயரும் போது, வழியில் நிலங்களில் இருந்த பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் மேலுமலை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.