1½ பவுன் தாலியை திருடிய 3 பெண்கள் கைது
1½ பவுன் தாலியை திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
புதுக்கோட்டை மாவட்டம், மலைக்குடிப்பட்டி அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 22). இவர் தனது குழந்தையை மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அரசு பஸ்சில் அழைத்து வந்தார். வடக்கிப்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது, கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலியை மணப்பாறை அருகே சின்ன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா (28), ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த காமாட்சி (40), அலமேலு மங்கம்மாள் (40) ஆகியோர் சேர்ந்து திருடி உள்ளனர். இதைக்கண்ட சக பயணிகள் அவர்களை பிடித்து மணப்பாறை போலீ்சில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து நகையை மீட்டனர்.
Related Tags :
Next Story