மரம் வெட்டியபோது மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் படுகாயம்


மரம் வெட்டியபோது மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மரம் வெட்டியபோது மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே குடமுருட்டி கிராமத்தில் செல்வம் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் வேலு (வயது 36), ராஜசேகர் மகன் சிவராஜ் (27) மற்றும் பெருமாள் மகன் பாபு (40) ஆகிய 3 பேரும் அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்காக தோப்பில் இருந்த மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தோப்பில் நடுவே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகளில் மரம் சாய்ந்து விழுந்ததாக தெரிகிறது. இதில் வேலு உள்ளிட்ட 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story