லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வயது சிறுமி பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வயது சிறுமி பலி
x

சூளகிரி அருகே லாரி- மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி பலியானார். தந்தை படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சிறுமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராதே (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 26-ந் தேதி தன்னுடைய 3 வயது மகள் அனிகாவுடன் மோட்டார்சைக்கிளில் சூளகிரி அருகே வந்து கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி அருகே கிரானைட் கம்பெனி பக்கம் சென்றபோது முன்னால் சென்ற லாரி எந்த சிக்னலும் இல்லாமல் திடீரென திரும்பியது. இதனால் பின்னால் மோட்டார்சைக்கிளில் சென்ற ராதே நிலை தடுமாறி லாரி மீது மோதினார்.

சிறுமி பலி

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அனிகா இறந்தார். படுகாயங்களுடன் ராதே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story