நம்பியூர் அருகே மனைவியை கொல்ல முயன்ற முதியவருக்கு 3 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


நம்பியூர் அருகே மனைவியை கொல்ல முயன்ற முதியவருக்கு 3 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

நம்பியூர் அருகே மனைவியை கொல்ல முயன்ற முதியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

நம்பியூர் அருகே மனைவியை கொல்ல முயன்ற முதியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கொலை முயற்சி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நாச்சிபாளையம் வாத்தியார் தோட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 62). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும், சந்திரா என்ற மகளும் உள்ளனர். மனைவி சாந்தியின் நடவடிக்கையில் ரங்கசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே 2 பேரும் ஒரே தோட்டத்தில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தோட்டத்தில் மாட்டில் இருந்து பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரங்கசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சாந்தியின் தலையில் வெட்ட முயன்றார். அதை பார்த்து சுதாரித்து கொண்ட சாந்தி இடது கையால் தடுத்தார். இதில் சாந்தியின் உள்ளங்கை, விரல்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. மேலும் காலிலும் வெட்டிவிட்டு ரங்கசாமி தலைமறைவானார்.

சிறை தண்டனை

காயம் அடைந்த சாந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரின் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், குற்றம் சாட்டப்பட்ட ரங்கசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.


Next Story