பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x

பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது.

திருநெல்வேலி

அம்பை:

விக்கிரமசிங்கபுரம் ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி முத்துலட்சுமி (வயது 52). இவர் கடந்த 2014-ம் ஆண்டு விக்கிரமசிங்கபுரம் சன்னதி தெருவில் உள்ள பீடி கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த மணி என்பவரது மகன் இசைச்செல்வன் என்ற செல்வன் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (32) என தெரியவந்து, அவர்கள் மீது அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைசெல்வன், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இசைச்செல்வனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கும்படியும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் மீது ஏற்கனவே கோர்ட்டு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


Next Story