வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வழக்கு
விருதுநகர் யூனியன் அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் வியாபாரி பாலமுருக ராஜா(வயது 42). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருக ராஜாவை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சிறை தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், வியாபாரி பாலமுருக ராஜாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.