பண்ருட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


பண்ருட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x

பண்ருட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள கொஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சதானந்தம் மனைவி ராதா(வயது 35). இவர் கடந்த 28-7-2022 அன்று தனது ஆடுகளை அங்கு உள்ள பலா தோட்டத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காடாம்புலியூர் மெயின் ரோட்டை சேர்ந்த தனசேகரன் மகன் பிரகாஷ்(28), ராதா அணிந்திருந்த 2½ பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்த புகாாின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ராதாவிடம் நகை பறித்த பிரகாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மகேஷ் உத்தரவிட்டார்.


Next Story