பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x

பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி கண்மணி (வயது 37). இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த 16.12.2017 அன்று இரவு 10:30 மணிக்கு வழக்கம் போல் தனது மருந்துகடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்ல தயாரான போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கண்மணி கழுத்தில் கிடந்த 8½ பவுன் தாலி செயினையும், கையில் வைத்திருந்த பணப்பையையும் பறித்துக்கொண்டு கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களுடன் தப்பி சென்று விட்டான். இதுகுறித்து கண்மணி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாட்சியாபுரத்தை சேர்ந்த அழகுராஜா (27) உள்பட 3 ேபரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகாசி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 1-ல் நடை பெற்று வந்தது. இந்தநிலையில் இ்ந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு ராஜேஷ்கண்ணன் விசாரித்து அழகுராஜாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 2 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story