பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 24 Jun 2023 1:30 AM IST (Updated: 24 Jun 2023 4:15 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சந்தோசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

சேலம்

சேலம் கன்னங்குறிச்சி பிரகாசம் நகரை சேர்ந்தவர் யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் யசோதாதேவியிடம் நகையை பறித்த கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின் ரோட்டை சேர்ந்த சந்தோசை (30) போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சந்தோசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.


Related Tags :
Next Story