ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை


ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாகப்பட்டினம்

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ரூ.500 லஞ்சம்

நாகை தாலுகா ஆழியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அமீன். கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி அமீன், தனது ரேஷன் கார்டில் இருந்து தனது மாமா முகம்மது சலிமுதீனின் பெயரை நீக்குவதற்காக அப்போது தேமங்கலம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய குணசேகரன் என்பவரிடம் மனு செய்தார். மனுவை பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், முகம்மது சலிமுதீனின் பெயரை நீக்கி சான்றிதழ் வழங்க அமீனிடம் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அமீன் இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழங்கிய ஆலோசனையின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனிடம் அமீன் ரூ.500 லஞ்சம் கொடுத்தார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், குணசேகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

3 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா, அரசு பணியை செய்வதற்காக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


Next Story